குழந்தைகளுக்கு நெய் கொடுப்பதன் நன்மைகள் இவ்வளவா? மருத்துவ விளக்கம்
குழந்தைகளுக்கு ஒரு ஷ்பூன் நெய் கொடுப்பது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்பதை மருத்துவர் விளக்கி உள்ளார்.

குழந்தைக்கு நெய்
சமையலறைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் நெய். நெய் இல்லாமல் பல வீடுகளில் சாப்பாடு இருக்காது. அந்த அளவிற்கு இந்திய சமையலில் நெய்க்கு முக்கியதுவம் கொடுப்பார்கள்.
நெய் பொதுவாக சாதத்தில் ஊற்றி சாப்பிடுவார்கள். இல்லை என்றால் சப்பாத்தி தோசை போன்றவற்றிலும் தடவி சாப்பிடுவார்கள். ஆனால் நெய் குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் முக்கியம் எனப்படுகின்றது.
நெய்யில் வைட்டமின்கள் ஏ, டி, ஈ, கே மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
ஆனால் பலரும் குழந்தைகளுக்கு நெய் கொடுக்கலாமா வேண்டாமா என சந்தேகத்தில் தான் இருப்பார்கள். இந்த குழப்பத்திற்கு விடையாக குழந்தைகளுக்கு நெய் கொடுப்பது ஏன் அவசியம் என்பதை டாக்டர் சந்தீப் குப்தா விளக்கி உள்ளார்.

குழந்தைகளுக்கு நெய் கொடுப்பதன் நன்மை
- குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க நெய் உதவுகிறது காரணம் இது நல்ல கொழுப்பின் சிறந்த ஆதாரமாகும்.
- குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு இது உதவுகிறது.
- குழந்தைகளுக்கு நெய் கொடுப்பது அவர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்த உதவும்.
- நெய் வைட்டமின்கள் ஏ, டி, கே, ஈ ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இதனால் குழந்தைகள் வளரும் பருவத்தில் இது அவசியம்.
- இது குழந்தைகளுக்கு மலம் கழிப்பதை நெய் எளிதாக்குகிறது.
- செரிமான அமைப்புக்கு நெய் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

முக்கிய குறிப்பு - குழந்தைகளுக்கு நெய் கொடுக்க வேண்டும் என்றால் 6 மாதங்களுக்குப் பின்னர் கொடுக்கவும். 6 முதல் 12 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு1 தேக்கரண்டி நெய் கொடுக்க வேண்டும்.
1 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தினமும் 5-10 மில்லி நெய் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு நெய்யை ஒருபோதும் நேரடியாகக் கொடுக்க கூடாது.
அதை பருப்பு, கஞ்சி அல்லது பயறு போன்றவற்றுடன் கலந்து கொடுக்க வேண்டும். மிகவும் முக்கியமாக எப்போதும் நெய்யை சரியான அளவில் கொடுப்பது அவசியம். அதிகமாகக் கொடுப்பது தீங்கு விளைவிக்கும். மேலும் மருத்துவ ஆலோசனை பெற்ற பின்னர் எல்லா முயற்சிகளையும் செய்யுங்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |