மதிய உணவை குழந்தைங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடனுமா? இந்த சாதம் செய்து கொடுங்க
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாக தக்காளி பூண்டு முட்டை சாதம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மதிய உணவிற்கு சற்று வித்தியாசமான முறையில் சாதம் சாப்பிட ஆசைப்படுவார்கள். அவ்வாறு வித்தியாசமான உணவை விரும்பும் குழந்தைக்கு தக்காளி பூண்டு முட்டை சாதம் செய்து கொடுக்கலாம்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த உணவை எவ்வாறு தயாரிப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு...
பூண்டு - 1/4 கப்
பெரிய தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1/4 கப்
கடுகு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - சுவைக்கேற்ப
முட்டை - 4
வேக வைத்த பாசுமதி அரிசி - 1 கப்
கொத்தமல்லி - சிறிது

செய்முறை
முதலில் மிக்ஸி ஜாரில் பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

இதில் அரைத்து வைத்த தக்காளி கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி, பின்பு 4 முட்டைகளை உடைத்து கிளறிவிடவும்.
அதன் பின்பு வேக வைத்துள்ள பாசுமதி அரிசி சாதம், கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான தக்காளி பூண்டும் முட்டை சாதம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |