உருளைக்கிழங்கு வறுவல் இப்படி பொடி பண்ணி வைச்சிக் கொடுங்க.. சுவை அள்ளும்.
சுவையான உருளைக்கிழங்கு வறுவல் அதுவும் பொடி அரைத்து எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒரு காய்கறி. உருளைக்கிழங்கு, சாதம், சப்பாத்தி உட்பட பல உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. உருளைக்கிழங்கு இந்திய உணவுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

காரசாரமான உருளைக்கிழங்கு வறுவல் பொடி சேர்த்து எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு..
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு..
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2 துண்டு
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
வரமிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
வறுத்து அரைத்த பவுடர் - பாதி
தண்ணீர் - சிறிது
உருளைக்கிழங்கு - 4 (வேக வைத்து தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது) .
செய்முறை:
முதலில் தேவையான உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதின் தோலை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் சிறிது சீரகம், சோம்பு சேர்த்து வதக்கவும். பின் அதை ஜாரில் சேர்த்து அதை பொடியாக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மீண்டும் கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அத்துடன் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்தது நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின் அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி மற்றும் நாம் அரைத்து வைத்த பொடியில் பாதியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இது நன்கு வதக்கிய பின் நாம் துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
பின் மீதமுள்ள பொடியையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் சூடான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |