மீன் மொய்லி கேரளா ஸ்டைல் எப்படி செய்யனும் தெரியுமா?
சுவையான கேரளா ஸ்டைல் மீன் மொய்லி எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
மீன்
அசைவ பிரியர்களின் பட்டியலில் மீன் முதலிடத்தில் இருந்து வருகின்றது. பொதுவாக கேரளாவில் வைக்கும் சமையல் மிகவும் ருசியாகவே இருக்கும்.
மீனில் சாலை, உழி, நெத்தில் போன்ற பல வகை உள்ளது. இதனை நாம் குழம்பு வைத்து சாப்பிட்டிருப்போம் அல்லது பொரித்து சாப்பிட்டிருப்போம்.
ஆனால் இதை எல்லாம் விட வித்தியாசமாக மீன் மொய்லி செய்து சாப்பிடுங்க. அந்த வகையில் கேரளா ஸ்டைல் மீன் மொய்லி எவ்வாறு செய்யலாம் என்பதை குறித்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
வஞ்சிரம் மீன் - அரை கிலோ
தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - 2 இன்ச்
நறுக்கிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 6 பற்கள்
நறுக்கிய தக்காளி - 2
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் - 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
பிரஷ் தேங்காய் பால் - அரை லிட்டர்
சிறிய எலுமிச்சை - 1
வினிகர் - 1 டீஸ்பூன்

செய்முறை
முதலில ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அது சூடானதும் நாம் பொடியாக துருவிய இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
இவை நன்கு வதக்கிய பின் நாம் நறுக்கி வைத்த வெங்காயம் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
இவை நன்கு வதக்கிய பின் நாம் நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இவை எல்லாம் நன்கு வதக்கிய பின் தேவையான அளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

பின் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வேண்டும். நன்கு கொதித்த பின் நாம் வாங்கி வைத்த மீன் துண்டுகளை சேர்த்து வேக வைக்க வேண்டும்.
பின் தீயை கம்மியாக வைத்து அரைத்து வைத்த தேங்காய் பாலை முழுமையாக ஊற்றி இத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
இவை எல்லாவற்றையும் மிதமான தீயில் வைத்து கொதிக்க விட்டு பின் இறக்கினால் சுவையான கேரளா ஸ்டைல் மீன் மொய்லி ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |