ஆந்திர ஸ்டைல் சுவையான கார்லிக் சிக்கன்... வெறும் 10 நிமிடம் போதும்
சிக்கனை வழக்கமாக செய்து சாப்பிடாமல் ஒருமுறை கார்லிக் சிக்கன் செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக சிக்கன் வாங்கினால் வழக்கமாக குழம்பு, வறுவல், கிரேவி என்று செய்வது தான் வழக்கம். ஆனால் சிக்கனைக் கொண்டு சற்று வித்தியாசமாக சமைத்தால் வீட்டில் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
அந்த வகையில் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் கார்லிக் சிக்கன் செய்து கொடுக்கலாம். பூண்டு மற்றும் சிக்கன் சேர்த்து செய்யும் கார்லிக் சிக்கன் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
ஊற வைப்பதற்கு
சிக்கன் - 1 கிலோ
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 3 (மெல்லியதாக நறுக்கியது)
ஊற வைத்த சிக்கன்
பச்சை மிளகாய் - 8 (கீறியது)
காஷ்மீரி மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
பூண்டு - 20 (தோல் நீக்கி தட்டியது)
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதில், மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
பின்பு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் ஊற வைத்த சிக்கனையுமு் சேர்த்து வதக்கவும்.

பச்சை மிளகாய் சேர்த்து கிளறி ஒரு 5 நிமிடம் சிக்கனை வேக வைக்கவும். சிக்கனில் இருந்து வரும் தண்ணீர் நன்றாக வற்றும் அளவிற்கு வதக்கிய பின்பு, காஷ்மிர் மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.
இத்துடன் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து 10 நிமிடம் வதக்கி, கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான ஆந்திரா கார்லிக் சிக்கன் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |