சுவையான பீச் ஸ்டைல் இறால் தொக்கு செய்வது எப்படின்னு தெரியுமா?
கடல் வகை உணவுகளில் ஒன்றான இறால் கிரேவி சற்று வித்தியாசமான முறையில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
இறால்:
அசைவ பிரியர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது கடல் வகை உணவுகள் தான். மீன் வகைகள் மட்டுமின்றி இறால் சாப்பிடுவதற்கும் அதிகமாக விரும்புகின்றனர்.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இறாலை பல வகைகளில் சமைப்பதை நாம் அவதானித்திருப்போம்.
அதாவது இறால் 65, இறால் கிரேவி, இறால் தொக்கு என சாப்பிட்டுள்ள நிலையில், சற்று வித்தியாசமான முறையில் இறால் தொக்கு செய்து அசத்தலாம்
அது எப்படி செய்வது என்று இங்கு கீழே காணலாம்.

தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
இறால் - 1/2 கிலோ
வறுத்து பொடி செய்வதற்கு.
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:
முதலில் நாம் வாங்கிட்டு வந்த இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நாம் கழுவி வைத்த இறாலை சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.
இது ஊறும் நேரத்தில் நாம் ஒரு வானொலியில் எண்ணெய் சேர்த்து அதில் மிளகு மற்றும் சோம்பு சேர்த்து உறலில் போட்டு நன்கு பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு தோரை கல்லை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அது காய்ந்தவுடன் நாம் ஊற வைத்த இறாலை அதில் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.
பின்பு நாம் அரைத்து வைத்திருந்து பொடியை சேர்த்து நன்கு மொறு மொறுப்பு வரும் வரை கிளறி விட்டு இறக்கினால் சுவையான இறால் தொக்கு ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |