உங்க குழந்தைங்க முட்டை சாப்பிடுறதில்லையா? இந்த மாதிரி ஒருக்கா செய்த கொடுங்க
முட்டை சாப்பிடுவதற்கு அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு முட்டை சமோசா எவ்வாறு செய்து கொடுக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக குழந்தைகளுக்கு சாயங்கால வேளை வந்துவிட்டாலே எதாவது ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிடுவதற்கு அதிகம் விரும்புவார்கள். ஆனால் பெரும்பாலான வீடுகளில் செய்து கொடுக்கின்றனர்.
அந்த வகையில் முட்டையை ஒதுக்கி வைக்கும் குழந்தைகளுக்கு ருசித்து சாப்பிடும் வகையில் முட்டை சமோசா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
முட்டை
மைதா மாவு
சோம்பு
பச்சை மிளகாய்
பெரிய வெங்காயம்
இஞ்சி பூண்டு பேஸ்ட்
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
மல்லித்தூள்
சிக்கன் மசாலா
சீரகத்தூள்
உப்பு
எண்ணெய்

செய்முறை
முட்டையை எடுத்து அவித்து தோலை நீக்கி துருவி வைத்துக் கொள்ளவும். சமைக்கும் பேன் ஒன்றில் எண்ணெய் சேர்த்து அதில் சோம்பு, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்.
நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயத்தினை அதில் போட்டு வதக்கவும். பின்பு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும்வரை வதக்கி, மஞ்சள், மிளகாய் தூள், மல்லித்தூள், சிக்கன் மசாலா, சீரகதூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.

இந்த மசாலா கலவையுடன் துருவிய முட்டையை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். பாத்திரம் ஒன்றில் மைதா எடுத்து அதில் உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து சமோசா போன்று முக்கோண வடிவத்தில் வைக்கவும்.
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி ஒவ்வொன்றாக பொரித்து எடுத்தால் சுவையான முட்டை சமோசா தயார். இதனை குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |