முட்டை மிளகு மசாலா... சாதம், சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்குமாம்
சாதத்திற்கு ஏற்ற சுவையான Egg Pepper Masala வெறும் இரண்டு முட்டையை வைத்து எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சமையல் வேலை என்பது பெரும்பாலான பெண்களுக்கு ஒரு சவாலான காரியமாக இருக்கின்றது. தினம் தினம் வித்தியாசமான வகையில் குழம்புகள், கூட்டு வைப்பது என்பது பெரிய சவால்.

பெரும்பாலான வீடுகளில் சாதம் வைத்துவிட்டு என்ன குழம்பு வைக்கலாம் என்று யோசிப்பார்கள். அவ்வாறு யோசிப்பவர்களுக்கு சுவையான முட்டை பெப்பர் மசாலா இருக்கின்றது.
வெறும் இரண்டு முட்டையை வைத்து இதனை எவ்வாறு சுலபமாக செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - ஒன்று
கருவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
கடுகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - சிறிதளவு
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை
கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, சீரகம், பெரிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், தக்காளி, கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

முட்டையை பாத்திரம் ஒன்றில் உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு அந்த மசாலா கலவை முழுவதும் முட்டையை ஊற்றி, அதன் மீது கொத்தமல்லி இலை, மிளகுதூள் சேர்த்து பிரட்டி எடுத்தால் சுவையான முட்டை மிளகு மசாலா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |