அட்டகாசமான சுவையில் மீன் வறுவல் இப்படி அரைத்து வைத்து பாருங்க..
அனைவரும் ருசித்து சாப்பிடும் இந்த மீன் வறுவலை வழக்கமான முறையில் செய்யாமல் மசாலாக்களை அரைத்து சேர்த்து வறுத்து சாப்பிட்டு பாருங்கள் அதன் சுவையே அதுதான்...
கடல் உணவுகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அதிலும் மீன் பற்றி சொல்லவா வேண்டும். குழம்பு மீனை விட வறுத்த மீனை தான் அசைவ உணவு பிரியர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அதற்கு முக்கிய காரணம் எண்ணெய் மற்றும் மசாலாக்களுடன் சேர்ந்து மொறு மொறு தன்மையுடன் சுவையாக இருப்பதே.

அனைவரும் ருசித்து சாப்பிடும் இந்த மீன் வறுவலை வழக்கமான முறையில் செய்யாமல் மசாலாக்களை அரைத்து சேர்த்து வறுத்து சாப்பிட்டு பாருங்கள் அதன் சுவையே அதுதான். ஒருமுறை மீனை இப்படி வறுத்து சாப்பிட்டீர்கள் என்றால் விடவே மாட்டிர்கள்... ரெசிபி இதோ
மரினேட் செய்ய தேவையான பொருட்கள் :
மீன்
பூண்டு - 9 பல்
சிவப்பு மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
கருப்பு மிளகு - 20
சீரகம்- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 சுவைக்கேற்ப
மற்ற பொருள்கள்:
எலுமிச்சை சாறு - 1.5 தேக்கரண்டி
எண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை :
முதலில் வாங்கிட்டு வந்த மீன் அனைத்தையும் நன்கு சுத்தம் செய்து அதன் நடுவில் கீறி வைக்க வேண்டும்.
பின் ஜாரில் ப்பு மிளகாய், பூண்டு, சீரகம், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள், கருப்பு மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து வைக்க வேண்டும்.

நாம் அரைத்து வைத்த மசாலாவை மீன் முழவதையும் தடவி சிறிது எலுமிச்சை சாறு தடவி நன்கு ஊற வைக்க வேண்டும். பின் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது நன்கு சூடானதும் மசாலா தடவி வைத்த மீனை சேர்க்கவும்.
இரு பக்கமும் நன்கு பொரிந்தவுடன் எடுத்து பரிமாறினால் சூடான மெரினெட் மீன் வறுவல் ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |