சப்பாத்திக்கு அருமையான சைடிஷ்... சோயா கீமா எப்படி செய்வது தெரியுமா?
சப்பாத்திக்கு அசத்தலான சுவையில் சோயா கீமா செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
சோயா கீமா
பொதுவாக இரவு டின்னர் என்றாலே நாம் அனைவரும் இட்லி, தோசை, சப்பாத்தி என்று தான் சாப்பிடுவோம். அதுவும் சப்பாத்திக்கு என்ன சைடிஷ் வைக்கலாம் என்று யோசிப்போம்.
அந்த வகையில் சப்பாத்திக்கு சைடிஷாக செய்வது தான் இந்த சோயா கீமா. இதன் சுவை மிகவும் அசத்தலாக இருக்கும். அது மட்டுமின்றி இதனை மிகவும் சுலபமாக தயாரிக்கவும் செய்யலாம்

குழந்தைகள், பெரியோர் என அனைவரும் எப்போதும் சாப்பிடுவதை விட இந்த முறை அதிகமாக விரும்பி சாப்பிடும் சோயா கீமா செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
மீல் மேக்கர் - 1 கப்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
புதினா - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
வேக வைத்த பச்சை பட்டாணி - 1/2 கப்
கொத்தமல்லி - சிறிது

செய்முறை
முதலில் பட்டாணியை வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். மீல் மேக்கரை சுடு தண்ணீரில் போட்டு ஊற வைத்து, நன்றாக பிழிந்து அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
முதலில் நாம் வாங்கிட்டு வந்த மீல் மேக்கரை சுடு தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். பின்பு அதை ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
கடாய் ஒன்றில் எண்ணெய், சோம்பு, வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் புதினா இவற்றினை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு மசாலா பொடிகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அது நன்கு வதக்கியவுடன் நாம் ஊற வைத்து அரைத்து வைத்த மீல் மேக்கரை சேர்த்து கிளறி விடவும்.
அதன் பச்சை பட்டாணியை சேர்த்து இறக்கினால் சுவையான மீல் மேக்கர் கீமா ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |