வீட்டில் அரிசி மாவு இருக்கா? 15 நிமிடங்களில் இந்த ஸ்நாக்ஸ் செய்ங்க
குழந்தைகளுக்கு எப்போதும் எதாவது ஒரு ஸ்நாக்ஸ் தேவைப்படும். இதனால் பெற்றோர்கள் கடையில் வாங்கி கொடுக்கும் பழக்கத்தை வதை்துள்ளனர்.
கடைகளில் கழைய எண்ணைகள் மற்றும் அதிக உப்பு மற்றும் சீனி பயன்படுத்தப்படுகின்றது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் கெடுதலை கொண்டு வரும்.
எனவே நாம் ஸடநாக்ஸ் கேட்டால் வீட்டிலேயே அதை செய்து கொடுப்பது நமக்கு எப்போதும் ஆரோக்கியத்தை தரும். அந்த வகையில் வீட்டில் மிகவும் எளிய பொருட்களை வைத்து 15 நிமிடங்களில் ஒரு ஸ்நாக்ஸ் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையானவை
- அரிசி மாவு – ஒரு கப்
- தண்ணீர் – அரை கப்
- காஷ்மீர் மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்
- சாட் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
- உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும். அரிசி மாவில் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, கலவையை சப்பாத்தி மாவுப் பதத்துக்குக் கலந்து சப்பாத்தி வடிவத்தில் தேய்த்துக்கொள்ளவும்.
ஒரு முட்கரண்டியால் சப்பாத்தியை ஆங்காங்கே துளையிட வேண்டும். அப்போதுதான் பொரிக்கும்போது குமிழ்கள் வராது. பின்னர் இந்த சப்பாத்தியை சிறிய, சிறிய முக்கோண வடிவங்களாக நறுக்கிக்கொள்ளவும்.
பின்பு இவற்றை சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பொரித்தெடுத்தவற்றின் மேல் உப்பு, காஷ்மீர் மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் தூவி சூடாகப் சாப்பிட்டால் கடைகளில் கிடைக்கும் ஸ்நாக்ஸ் தோற்று விடும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |