அட்டகாசமான சுவையில் சிங்கப்பூர் ஸ்டைல் ஃப்ரைடு ரைஸ்... ஈஸியா செய்வது எப்படி?
அட்டகாசமாக சுவையில் சிங்கப்பூர் ஸ்டைல் ஃப்ரைடு ரைஸ் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக ப்ரைடு ரைஸ் என்பது அனைவருக்கும் விருப்பமான உணவாக இருக்கின்றது. பெரும்பாலும் ஃபாஸ்ட் புட் உணவுகளையே சிறியவர் முதல் பெரியவர் வரை அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர்.
இந்நிலையில் சிங்கப்பூர் ஸ்டைல் ஃப்ரைடு ரைஸ் எவ்வாறு தயார் செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1 கப்
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
பூண்டு - 1 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி - 1 ஸ்பூன்
கேரட் - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள், பச்சை குடைமிளகாய் - ½ கப்
முட்டைகோஸ் - ½ கப்
சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1
வெங்காயத்தால் - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் பாசுமதி அரிசியை சாதமாக தயார் செய்து வைத்துக் கொள்ளவும். பின்பு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மசாலா பொடிகளை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விடவும். வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

பின்பு நறுக்கிய கேரட், குடை மிளகாய், முட்டை கோஸ் இவற்றினை சேர்த்து நன்றாக வதக்கிவிடவும். தொடர்ந்து கலந்து வைத்திருக்கும் மசாலா பொடியினை சேர்த்து நன்றாக கிளறவும்.
சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு இவற்றினை சேர்த்து வதக்கிய பின்பு, வடித்து வைத்திருக்கும் சாதத்தினை உள்ளே போட்டு நன்றாக கிளறி விடவும்.
கடைசியாக மல்லி இலை, வெங்காயத் தாள் தூவி இறக்கினால் சுவையான சிங்கப்பூர் ஸ்டைல் ஃப்ரைடு ரைஸ் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |