பனீர் பெப்பர் வறுவல் எப்படி செய்யனும்னு தெரியுமா?
புரதச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட விரும்புகிறவர்களுக்கு பனீர் சிறந்த உணவாக இருக்கின்றது. இந்நிலையில் பனீர் பெப்பர் ஃப்ரை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்..
பனீர்
பனீர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக இருக்கின்றது. கால்சியம் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
அசைவ பிரியர்களின் புரதச்சத்தை பூர்த்தி செய்வதற்கு பனீர் மிகவும் உதவியாக இருக்கின்றது. பனீரை பல வகைகளில் சமைத்து சாப்பிடும் நிலையில், பனீர் பெப்பர் வறுவல் பலரது விருப்ப தெரிவாக இருக்கின்றது.
அப்படி புரதச்சத்து கொண்ட பனீர் பெப்பர் வறுவல் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
பனீர் - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - காரத்திற்கேற்ப
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை
பனீரை சிறிய துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து அதில் பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் இவற்றினை சேர்த்து வதக்கவும்.
இதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி, மிளகு தூள், சீரகத்தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்..

மேலும் தக்காளி சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
சற்று கொதித்ததுடன், பனீர் துண்டுகளை சேர்க்கவும். தண்ணீர் வற்றியதும் சிறிதளது கறிவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான பனீர் பெப்பர் வறுவல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |