கேரளா ஸ்டைல் சுவையான மட்டன் பெப்பர் வறுவல் எப்படி செய்யனும் தெரியுமா?
காரசாரமான கேரளா ஸ்டைல் மட்டன் பெப்பர் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பெப்பர் வறுவல்
பொதுவாகவே அனைவருக்கும் சைவத்தை விட அசைவம் தான் பிடிக்கும். அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லாருடைய வீட்டிலேயும் அசைவம் தான் இருக்கும்.
அசைவத்தில் அதிகம் விரும்பி சாப்பிடுவது மட்டன். மட்டன் குழம்பமாக தான் அனைவரும் வைத்து சாப்பிட்டிருப்பார்கள். இத்தருணத்தில் மட்டன் பெப்பர் வறுவல் செய்து அசத்தலாம்.
அதிலும் கேரளா ஸ்டைலில் மட்டன் பெப்பர் வறுவல் எவ்வாறு செய்யலாம் என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
அரை கிலோ மட்டன் - 2 ஸ்பூன் மிளகு
1 பச்சை மிளகாய் - 8 பூண்டு பல்
1 அங்குல இஞ்சி - 2 பெரிய வெங்காயம் (மெல்லியதாக நறுக்கியது)
1 பழுத்த தக்காளி (மெல்லியதாக நறுக்கியது)
½ ஸ்பூன் மஞ்சள் தூள் - 2 ஸ்பூன் தனியா தூள்
½ ஸ்பூன் சோம்பு தூள்
½ ஸ்பூன் கரம் மசாலா - 2 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள் (பொடியாக நறுக்கியது)
2 கொத்து கறிவேப்பிலை
தேவையான அளவு உப்பு
4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

செய்முறை
முதலில் நாம் இஞ்சி,பூண்டு,மிளகு,மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.பின்பு அதை நாம் கழுவி வைத்த மட்டனுடன் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
இவை நன்கு ஊறிய பின் ஒரு வானொலியில் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம்,மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.பின் மஞ்சள் தூள், மல்லித்தூள், சோம்புப் பொடி மற்றும் கரம் மசாலாவை சேர்த்து வதக்கி விடவும்.

எண்ணெய் பிரியும் போது சிறிது தண்ணீர் சேர்க்கவும்.பின்னர் நாம் ஊறவைத்த மட்டன் கலவை குக்கரில் சேர்த்து 5 விசில் வரை வேக வைக்கவும்.
இறுதியாக ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கினால் சுவையான மட்டன் பெப்பர் வறுவல் ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |