கத்திரிக்காய் மிளகு குழம்பு இப்படி செய்து பாருங்க... சளி, இருமல் எல்லாம் சரியாகிடும்
செட்டிநாடு ஸ்டைலில் கத்திரிக்காயை வைத்து மிளகு குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - 4 (நீளமாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 15
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - ½ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ½ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - 1 ஸ்பூன்
வறுத்து அரைக்க
எண்ணெய் - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - அரை ஸ்பூன்
வர மிளகாய் - 3
தேங்காய் - ¼ கப்
மல்லித் தூள் - 2 ஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு

செய்முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலா விழுதையும் சேர்த்து நன்றாக கிளறவும்.

பின்பு தேவையான தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து கொதிக்கவிடவும். குழம்பு சற்று கெட்டியானதும் அடுப்பை அணைத்தால் சுவையான கத்திரிக்காய் மிளகு குழம்பு தயார்.
சூடான சாதத்தில் கத்திரிக்காய் குழம்பு அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |