அரிசி உளுந்து இல்லாமல் பஞ்சு போன்ற இட்லி செய்யலாம் எப்படி தெரியுமா?
இட்லி நமது காலை உணவில் மிகவும் முக்கியமாக இடம்பெறும் ஒரு உணவாகும். இதற்கு கட்டாயமாக அரிசி ஊழுந்து தேவபை்படும். இதை வைத்து தான் பாரம்பரியமாக மக்கள் தொண்டு தொட்ட காலம் இருந்து இட்லி செய்து வருகின்றனர்.
பொதுவாக இது தமிழ் நாட்டில் உள்ளவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். இந்த இட்லி உணவை சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையான உணவாக இருக்கும்.
இதை பல வகையாகவும் செய்கிறார்கள். அந்த வகையில் தான் உளுந்தும் அரிசியும் இல்லாமல் ஜவ்வாரிசியை வைத்து இட்லி செய்ய முடியும். இது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரை கப் நைலான் ஜவ்வரிசி
- அரை கப் ரவை
- ஒரு கப் தயிர்
- 1 பெரிய வெங்காயம்
- தேவவையான அளவு எண்ணெய்
- 1 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 12 முந்திரி பருப்பு
- அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- சிறிதளவு இஞ்சி
- 2 பச்சை மிளகாய்
- 1 தேங்காய்
- சிறிதளவு கறிவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில் ஜவ்வரிசியை ஊற வைத்து விட வேண்டும். இதனை குறைந்தது 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இபொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.
எண்ணெய் சூடானதும் அதில் சிறிதளவு கடுகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்கவும். மேலும் இதில் பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு சிறிதளவு பெருங்காயத் தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், துண்டுகளாக நறுக்கிய தேங்காய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.
இதில் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு சில நிமிடங்கள் வதக்கி விட வேண்டும். இதில் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கப் ரவை சேர்த்து நன்கு கலக்கி விட வேண்டும் மிதமான தீயில் அடுப்பை வைத்து, ரவையை நன்றாக வறுக்கவும்.
வறுத்த ரவையை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றவும். ஊறவைத்த ஜவ்வரிசியை இந்த கலவையில் சேர்க்கவும். ஒரு கைப்பிடியளவு நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.
இப்போது இதனுடன் ஒரு கப் தயிர் சேர்க்கவும். அனைத்தையும் கலக்கவும். கால் கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் கலக்கவும். ஜவ்வரிசிஇட்லி மாவு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |