முன்னோர்களின் பாரம்பரிய உணவான சிறுதானியம்... இதில் சப்பாத்தி செய்வது எப்படி?
உடலுக்கு ஆரோக்கியத்தினை அளிக்கும் சிறுதானியங்களை வைத்து சப்பாத்தி செய்வதை தெரிந்து கொள்வோம்.
சிறுதானியம்
பொதுவாக சிறுதானியம் என்பது இந்திய பாரம்பரிய உணவாக இருந்து வருகின்றது. முன்னோர்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
சிறுதானியத்தில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகமாக இருக்கின்றது. மேலும் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், நீரிழிவு நோயினை கட்டுக்குள் வைப்பவர்கள், செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வும் அளிக்கின்றது.
மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து அதிகமாக உள்ள நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு சிறந்த ஆரோக்கிய உணவாகவும் இருக்கின்றது.
இவ்வாறு அதிக சத்துக்கள் நிறைந்த சிறுதானியத்தில் சப்பாத்தி எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்
கம்பு - அரை கப்
சோளம் - அரை கப்
கேழ்வரகு - அரை கப்
கருப்பு உளுந்து - அரை கப்
கோதுமை - அரை கப்
உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
முதலில் கொடுக்கப்பட்டுள்ள சிறுதானியங்கள் எல்லாவற்றையும் நன்றாக சுத்தம் செய்து சப்பாத்தி மாவுக்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு தேவையான மாவை பவுலில் எடுத்துக் கொண்டு, அதில் தேவையான அளவிற்கு தண்ணீர், உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.

அவ்வாறு பிசைந்த மாவினை ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்பு சப்பாத்தியாக தேய்த்து, தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து சப்பாத்தியாக சுட்டு எடுத்தால், சத்தான சிறுதானிய சப்பாத்தி தயார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆரோக்கியம் அளிக்கும் இதனை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |