வாரம் ஒருமுறை இந்த கம்பு அடை தோசையை செஞ்சு சாப்பிடுங்க.. எலும்பு பிரச்சனையே வராது...
அநேக ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் கம்பு அடை தோசை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் காணலாம்.
கம்பு தோசை
பொதுவாகவே காலை டிபன் என்றாலே நாம் அனைவரும் இட்லி, தோசை, சப்பாத்தி மட்டும் தான் சாப்பிட்டிருப்போம்.
ஆனால் நம் முன்னோர்கள் எப்போதும் நல்ல சத்தான உணவுகளை மட்டும் தான் சாப்பிட்டார்கள்.அதினால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடிந்தது.
அந்த வகையில் ஒன்று தான் கம்பு அடை தோசை.இது நிறைய சத்துக்களை கொண்டது.இதில் கால்சியம் அதிகமாக உள்ளதால் அது நம் எலும்புகளுக்கு நல்ல வலிமையை தருகிறது.
இதை நம் உணவில் அன்றாட சேர்ப்பதன் மூலம் நமக்கு நிறைய பலன்கள் கிடைக்கிறது.அப்படிபட்ட அடையை எப்படி செய்வது என்று இங்கு காண்போம்..

தேவையான பொருட்கள்:
ஊற வைத்து அரைப்பதற்கு...
* கம்பு - 1 கப்
* வரமிளகாய் - 2
* இஞ்சி - 1 இன்ச்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:
முதலில் நாம் கம்பை நன்கு கழுவி அதை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.பின்பு அதை நாம் மிக்சர் ஜாரில் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
பின்பு அதே ஜாரில் ரமிளகாய், இஞ்சி, சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.அதனோடு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்று மையாக அரைக்க வேண்டும்.
ரு வானொலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.பின்பு அதில் கொஞ்சம் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

அதனோடு துருவிய கேரட்டையும் சேர்க்க வேண்டும்.அது நன்கு வதக்கிய பின் கொத்தமல்லி மற்றும் தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும்.இந்த கலவையை நாம் அரைத்து வைத்த கம்புடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
பின்கு அதை நாம் நாம் தோசை டவாயில் மிதமான தீயில் தோசை சுட்டால் கம்பு அடை தோசை ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |