வீட்டில் தட்டப்பயிறு, உருளைக்கிழங்கு இருக்குதா?... சப்பாத்திக்கு அருமையான கிரேவி தயார்
தட்டப்பயறு மற்றும் உருளைக் கிழங்கு கொண்டு சப்பாத்திக்கு தயார் செய்யும் அட்டகாசமான கிரேவியைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு, பட்டாணி குருமா, பனீர் கொண்டு செய்யப்படும் கிரேவி இதை தான் மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர்.

சப்பாத்திக்கு ஏற்ற அருமையான கிரேவியை குறித்து உங்களுக்கு தெரியுமா? ஆம் வெறும் தட்டப்பயறு மற்றும் உருளைக்கிழங்கு மட்டும் இருந்தால் போதும். அசைவ உணவையே தோற்கடிக்கும் வகையில் கிரேவி செய்து அசத்தலாம்.
வழக்கமான வகையில் கிரேவி செய்யாமல் தட்டப்பயறு கொண்டு ஒருமுறை இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு...
துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
கல்பாசி - சிறிது

தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தட்டைப்பயறு - 1 கப் (8 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)
உருளைக்கிழங்கு - 2 (தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது)
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிது
செய்முறை
முதலில் மிக்ஸி ஜாரில் அரைக்க வேண்டிய பொருட்களை போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பிலல் வைத்து எண்ணெய் சேர்த்து, அதில் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்பு மிளகாய் மற்றும் மல்லி, மஞ்சள் தூள்களை சேர்த்து வதக்கவும். இத்துடன் ஊற வைத்த தட்டப்பயிர் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து 2 நிமிடம் கிளறிவிடவும்.

இத்துடன் அரைத்த தேங்காய் விழுது மற்றும் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கினால் போதும். கடைசியாக கொத்தமல்லி இலையை தூவி இறக்கி பறிமாறலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |