சிக்கன் டிக்கா மசாலா.... ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே எப்படி செய்யலாம்?
Chicken Tikka Masala Recipe: அசைவ பிரியர்களுக்கு பிடித்த சிக்கன் டிக்கா மசாலா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் சிக்கன் ஆகும். சிக்கனில் குழம்பு, கிரேவி, சிக்கன் 65, கிரில், தந்தூரி இவ்வாறு செய்து சாப்பிடுவோம்.
இந்நிலையில் தோசை, சப்பாத்திற்கு ஏற்ற வகையில் சிக்கன் டிக்கா செய்தும் சாப்பிடலாம். அவ்வாறு சிக்கன் டிக்கா மசாலா ஹோட்டல் ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
ஊற வைப்பதற்கு
எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
உப்பு - சுவைக்கேற்ப
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தக்காளி - 2 (அரைத்தது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - 150 மிலி
சிக்கன் துண்டுகள்
பிரஷ் க்ரீம் - 4 டேபிள் ஸ்பூன்
கசூரி மெத்தி - 1/2 டீஸ்பூன்

செய்முறை
சிக்கனை பாத்திரத்தில் போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். இதில் தயிர், காஷ்மீர் மிளகாய் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து, அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து 10 நிமிடம் நன்றாக வதக்கி எடுக்கவும்.
மற்றொரு கடாயினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தினை சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

இதனுடன் அரைத்த தக்காளி சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், மல்லிதூள், மஞ்சள் தூள், சீரக தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கி, 150 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
இவை கொதிக்க ஆரம்பித்ததும், சிக்கன் துண்டுகளைச் சேர்த்து கிளறவும். இதனுடன் ப்ரஷ் கிரீம், உப்புசேர்த்து கிளறி 5 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியாக கஸ்தூரி மெத்தியை சேர்த்து இறக்கினால் சிக்கன் டிக்கா மசாலா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |