சத்துக்கள் நிறைந்த கருப்பு கவுனி அரிசி அல்வா... வெறும் 10 நிமிடம் போதுமாம்
சத்துக்கள் நிறைந்த அரிசியாக கருதப்படும் கருப்பு கவுனி அரிசியில் அல்வா செய்வதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கருப்பு கவுனி அரிசி
தேங்காய்
வெல்லம்
முந்திரி
உலர் திராட்சை
நெய்

செய்முறை
கருப்பு கவுனி அரிசி சமைப்பதற்கு முந்தைய நாள் இரவு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு தேங்காயை மிக்ஸியில் அரைத்து ஒன்றரை கப் அளவிற்கு தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும். அரைத்து வைத்த கவுனி அரிசி மற்றும் தேங்காய் பால் இரண்டையும் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.

இத்துடன் ஒரு கப் வெல்லம், ஒரு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வேகவிடவும். நன்றாக வெந்த பின்பு நெய் சேர்த்து கிளறவும்.
வெந்தபின்பு முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்து இறக்கினால் சுவையான கருப்பு கவுனி அரிசி அல்வா தயார்.
