சிறுநீரக கற்களை அடியோடி கரைக்கும் வாழைத்தண்டு! இப்படி சமைத்து சாப்பிடுங்க
பொதுவாக வாழை என்று சொன்னாலே அதன் எல்லா பாகங்களும் நமக்கு நன்மை தரக்கூடியது.வாழை இலை வாழைக்காய் வாழைப்பழம் வாழைக்காய் நாம் சாப்பிட பயன்படுகின்றது.
இதே போல தான் வாழையின் தண்டில் பல சத்துக்கள் இருக்கின்றன.வாழைத் தண்டை நாம் அடிக்கடி சாப்பிட்டால், செரிமானம் சீராக இருக்க உதவும். மேலும் இதில் வைட்டமின் B6 உள்ளதால் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
வயிற்றெரிச்சல், நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் வாரம் இரண்டு முறை வாழைத் தண்டை சாப்பிட்டு வருவது நன்மையை தரும். இதை தினமம் நமது உணவில் செர்த்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரையும்.இதை எப்படி சுவையாக சமைக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 1 வாழைத்தண்டு
- 1 பெரிய வெங்காயம்
- 3 வற மிளகாய்
- சிறிதளவு மஞ்சள் தூள்
- அரை கப் தயிர்
- கால் கப் துருவிய தேங்காய்
- 1 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் உளுந்து
- தேவையான அளவு உப்பு
- 2 டீஸ்பூன் எண்ணெய்
செய்முறை
முதலில் சுத்தமான அழுகாத வாழைத்தண்டை எடுத்துக் கொள்ளவும். இந்த வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் தயிர்,உப்பு,மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுந்து, வற மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை போட்டு வதக்கி கொள்ளவும்.
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் சிறிதளவு நீரை ஊற்றி கொதிக்க விடவும். பின் இதில் வாழைத்தண்டு சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து கொள்ள வேண்டும். இறுதியாக இந்தில் துருவிய தேங்காய் சேர்த்து கிளறவும்.
நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்து விட வேண்டும். சுவையான மற்றும் சூடான வாழைத்தண்டு பொரியல் ரெடி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |