ஆந்திரா ஸ்டைல் வேர்கடலை சட்னி எப்படி செய்யனும் தெரியுமா?
சுவையான ஆந்திரா ஸ்டைல் வேர்கடலை சட்னி செய்வது எப்படி என்று இங்கு காணலாம்.
வேர்க்கடலை
வேர்க்கடலையில் புரதங்கள், எண்ணெய் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்த அளவில் இருக்கிறது. நமது தோலை மென்மையாக வைத்திருப்பதுடன் காயங்களை குணப்படுத்தவும் உதவுகின்றது.
ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் வேர்க்கடலை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், முதுமையை தடுக்கவும் செய்கின்றது.
ஆனால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் வேர்க்கடலையில் சட்னி எப்படி செய்வது என்பதையும் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
1 ஸ்பூன் - எண்ணெய்
1 கப் - பச்சைக் கடலை
5 - வர மிளகாய்
2 ஸ்பூன் - நறுக்கிய இஞ்சி
2 ஸ்பூன் - நறுக்கிய பூண்டு
¼ கப் - நறுக்கிய சின்ன வெங்காயம்
2 ஸ்பூன் - புளிக்கரைசல்
தேவையான அளவு - உப்பு
தாளிக்க
2 ஸ்பூன் - எண்ணெய்
அரை ஸ்பூன் - கடுகு
அரை ஸ்பூன் - சீரகம்
ஒரு சிட்டிகை - பெருங்காயம்
1 கொத்து - கறிவேப்பிலை

செய்முறை
கடாயில் தேவையான அளவு வேர்கடலை சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். பின்பு அதே கடாயில் எண்ணெய் சேர்த்து வரமிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் சிறிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதக்கிய பொருட்களை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு புளி கரைசல் மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயில் கடுகு, சீரகம், பெருங்காம் சேர்த்து நன்கு பொரிந்தவுடன் அத்துடன் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கிளறி விடவும்.
இவ்வாறு கிளறி விட்டு இறக்கினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் வேர்கடலை சட்னி ரெடி.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |