சாணக்கிய நீதி: பணத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க... மூட்டைகளில் பணம் சேர ஆரம்பிச்சிடும்
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக வாழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றிய ஆழ்ந்த அறிவையும் ஞானத்தைக் கொண்டிருந்தமையால் இவர் கருத்துக்கள் பிற்காலத்தில் உலகப்புகழ் பெற்றது.
இன்றும் உலகளாவிய ரீதியில் பல நாடுகளிலும் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.
சாணக்கிய நீதி சாஸ்திரத்தின் அடிப்படையில் வாழ்வில் அதிக பணத்தை ஈர்க்க வேண்டும் என்றால், இருக்கும் பணத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் அதிக கவனம் தேவை என குறிப்பிடப்படுகின்றது.
பணத்தை ஈர்க்கும் வழிகள்
சாணக்கியரின் கருத்துப்படி வாழ்வில் அதிக பணம் உங்களை தேடிவர வேண்டும் என்றால், பணம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் தற்பெருமை கொள்ளக்கூடாது. சம்பாதிக்கும் போது பணிரைவ வளர்த்துக்கொள்பவர்கள் அதிக பணத்தை அடைவார்கள்.
சம்பாதிக்கும் பணத்தை உங்களின் நலனுக்காக மட்டுமன்றி ஒரு பங்கு மற்றவர்களுக்காகவும் செலவிடும் பழக்கம் உங்களிடம் இருந்தால், பணத்தின் கடவுளாக கருதப்படும் லட்சுமி தேவியின் முழுமையான அருள் உங்களுக்கு கிடைக்கும்.
அதனால் நீங்கள் மற்றவர்களுக்கு செலவழித்த பணம் பலமடங்காக மீண்டும் உங்களிடமே ஏதோ ஒரு வழியில் திரும்பிவரும் என சாணக்கிய நீதி குறிப்பிடுகின்றது.
பணத்தின் அருமை தெரிந்து அதனை புத்திசாலித்தனமான செலவழிக்க கற்றுக்கொள்ள வேண்டும். சம்பாதிப்பதில் பத்தில் ஒரு பங்கை சேமித்து வைக்கும் போது, சேமிப்பில் இருக்கும் பணம் பிரபஞ்சத்தில் இருந்து அதிக பணத்தை தன்வசப்படுத்துகின்றது. இதனால் பணம் வரும் வழிகள் பெருகும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
பணம் அதிகமாக கிடைக்கின்றது என்றால் இது குறித்த வெளியாட்களிடம் பெருமையாக பேசிக்கொள்ளும் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.
அதனால் திருடர்களிடமிருந்து தீய கண்பார்வைகளில் இருந்தும் உங்கள் பணத்தை முழுமையாக பாதுகாத்துக்கொள்ளலும் பணத்தை பெருக்கவும் முடியும்.
பணம் ஒருபோதும் மற்றவர்களை இழிவுப்படுத்தவும், அவமானப்படுத்தவும், துன்புறுத்தவும் பயன்படுத்தவே கூடாது மாறாக அதனை கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அப்போது தான் அந்த பணம் அதிக பணத்தை ஈர்க்கும்.
செல்வத்தை எந்தளவுக்கு நல்ல விடயங்களுக்காக பயன்படுத்துகின்றோமோ, அந்தளவுக்கு பணம்“ பெருகிக்கொண்டே செல்லும் என சாணகக்கிய நீதி குறிப்பிடுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |