நீரிழிவு நோய் வரக்கூடாதா? அப்ப 'இத' ஒரு கப் அடிக்கடி குடிங்க போதும்!
நீரிழிவு நோய் என்பது பொதுவாக காணப்படும் ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இன்று மாறிவிட்டது.
இந்த நாள்பட்ட நோயானது கணையம் இன்சுலினை குறைவாகவோ அல்லது சுரக்காமலோ இருக்கும் போது ஏற்படுகிறது.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க தண்ணீர் மிகச்சிறந்த தீர்வாக இருந்தாலும், சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டுமானால் ஒருசில மருத்துவ குணம் நிறைந்த பானங்களைக் குடிக்க வேண்டும்.
சர்க்கரை நோய் வராமல் இருக்க குடிக்க வேண்டிய பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை தினமும் குடிங்க.
வெந்தய நீர்
சர்க்கரை நோய்க்கான மிகவும் பயனுள்ள ஓர் இயற்கை வைத்தியப் பொருள் தான் வெந்தயம்.
ஆய்வு ஒன்றில், தினமும் பத்து கிராம் வெந்தய விதையை சுடுநீரில் ஊற வைத்து, நீருடன் வெந்தயத்தை உட்கொண்டு வந்தால், டைப்-2 சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
வெந்தய நீருக்கு சர்க்கரை நோயாளியின் உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் திறன் உள்ளது.

வெண்டைக்காய் நீர்
வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் நிறைந்திருப்பதை தவிர, கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் இரண்டும் வளமான அளவில் உள்ளன.
ஆகவே இது உடைந்து செரிமானமாவதற்கு சற்று அதிகம் நேரம் எடுக்கும் என்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கான ஒரு சிறந்த காய்கறியாகும். அதுவும் வெண்டைக்காய் நீர் குடிப்பது மிகவும் நல்லது.
அதற்கு 5 வெண்டைக்காயை நன்கு கழுவி, அதன் முனைகளை நீக்கிவிட்டு, இரண்டாக வெட்டி, ஒரு நீளமான டம்ளரில் போட்டு, அதில் நீரை நிரப்பி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் அந்நீரைக் குடிக்க வேண்டும்.

பார்லி நீர்
பார்லி நீரில் கரையாத நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
இது சர்க்கரை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இது சர்க்கரை குளுக்கோஸ் அளவை உறுதிப்படுத்த உதவுகிறது. இன்னும் சிறப்பான பலனைப் பெற பார்லி நீரில் இனிப்பு எதுவும் சேர்க்காமல் குடியுங்கள்.
