இடுப்பு வலி, மூட்டு வலிக்கு உடனடி நிவாரணம்! சத்தான இந்த சாதம் போதும்
Urad Dal RIce: உடம்பிற்கு ஆரோக்கியத்தினை அளிக்கும் சத்தான உளுந்தோரை சாதம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக வீட்டில் கலவை சாதம் செய்வது வழக்கமான ஒன்றாகும். ஆனால் எலும்பு ஆரோக்கியத்தினை உடனடியாக பெற வேண்டும் என்றால் உளுந்தம் பருப்பு சாதம் மிகவும் அருமையான தெரிவாகும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும். கால்வலி, இடுப்பு வலி, மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த உணவாகவும் இருக்கின்றது.
கருப்பு உளுந்தை பயன்படுத்தி இந்த சாதத்தினை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
1/4 கப் உடைத்த உளுந்து
3 வர மிளகாய்
1 ஸ்பூன் மிளகு
ஒரு சிட்டிகை பெருங்காயம்
சிறிது கறிவேப்பிலை
1 ஸ்பூன் எண்ணெய்
2 கப் சமைத்த சாதம்
தேவையான அளவு உப்பு
தாளிக்க
1 ஸ்பூன் நல்லெண்ணெய்
2 வர மிளகாய்
சிறிது கறிவேப்பிலை
1 ஸ்பூன் முந்திரி

செய்முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் ஆகியவற்றினை சேர்க்கவும்.
பருப்பு பொன்னிறமாகும் வரை வறுத்து, கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் உளுந்தோரை மசாலா தயார்.
கடாய் ஒன்றினை மீண்டும் அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். அதில் கடுகு சேர்த்து வெடிக்க தொடங்கியதும், வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.
பின்பு முந்திரியைச் சேர்த்து, லேசான பொன்னிறமாக வறுத்து, அடுப்பினை அணைத்துவிடவும். அகலமான பாத்திரத்தில் சாதத்தினை பரப்பி 5 நிமிடம் ஆற வைக்கவும்.

அதனுடன் தாளிப்பு மற்றும் உளுந்தம் பருப்பு மசாலா பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். இவ்வாறு கிளறி இறக்கினால் உளுந்தம் பருப்பு சாதம் தயார்.
இதுவே பொடி சேர்த்து செய்யாமல் சாதம் குக்கரில் வைப்பது போன்று பருப்பை வறுத்து அரிசியுடன் சேர்த்து கழுவி, சாதம் வைப்பது போன்றும் வைக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |