வாழைத்தண்டு தோசை எப்படி செய்யனும்னு தெரியுமா?
நம் கிட்னியை பாதுகாக்கும் வாழைத்தண்டு தோசை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.
வாழைத்தண்டு:
பொதுவாக வாழை மரத்தில் அனைத்து பகுதிகளுமே மனிதர்களின் ஆரோக்கியத்தினை அள்ளித்தருகின்றது. வாழை மரத்தின் இலை சாப்பிடுவதற்கு பயன்படுகின்றது.
வாழை இலையில் சாப்பிடுவது பாரம்பரிய செயலாக பார்க்கப்பட்டாலும், அதிக ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது. வாழைப் பூ ரத்தத்தினை சுத்திகரிப்பதற்கு உதவுகின்றது.

வாழை மரத்தின் நடுவே இருக்கும் அதன் தண்டுகள் சிறுநீரக பிரச்சனையை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. வாழைத்தண்டில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ளதுடன், எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.
அதில் தோசை எப்படி செய்வது என்று இங்கு கீழே காணலாம்.
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 4 கப்
வாழைத்தண்டு - 1
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1/2 இன்ச்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1/4 ஸ்பூன்
எண்ணெய் அல்லது நெய் தோசை மீது ஊற்ற
தண்ணீர் - சிறிதளவு(வாழைத்தண்டை அரைக்க)

செய்முறை:
முதலில் நாம் எடுத்த வாழைத்தண்டை நன்கு கழுவி பின் அதை வட்டமாக வெட்டி மோரில் ஊற வைக்க வேண்டும். பின் ஒரு ஜாரில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் சீரகம் சேர்த்து நன்கு பாதியாக அரைத்துக் கொள்ளவும்.
அத்துடன் நாம் வெட்டின வாழைத்தண்டுகளை சேர்த்து நன்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். ஆனால் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

பின் நாம் எப்போதும் வாங்கும் இட்லி தோசை மாவில் நாம் அரைத்து வைத்த விழுதையும் சிறிதளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்
பின் ஒரு தோசைக்கல்லில் ஊற்றி சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேக வைத்து எடுத்தால் சுவையான வாழைத்தண்டு தோசை ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |