Onlineல் இல்லாமல் எவ்வாறு UPI கொடுப்பனவுகளை செய்ய முடியும்?
Google Pay, Paytm, PhonePe அல்லது வேறும் ஏதேனும் UPI கொடுப்பனவு செயலிகள் ஒன்றை பயன்படுத்தி பணம் அனுப்பி வைக்கும் போது எப்போதாவது உங்களது இணைய இணைப்பு தடைப்பட்டதுண்டா?
அப்படியான சந்தர்ப்பங்களை நீங்கள் எதிர்நோக்கியிருந்தால் *99# என்ற குறியீடு உங்களுக்கு பேரூதவியாக அமையும்.
இந்த குறியீடு ஓர் கட்டமைக்கப்படாத டேட்டா உதவி சேவையை பெற்றுக்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக உங்கள் கணக்கு மீதியை அறிந்து கொள்ளவும், பணத்தை கோரவும், பணத்தை அனுப்பவும் முடியும்.
*99# சேவையானது நாடு முழுவதிலும் வழங்கப்படுகின்றது. 83 முன்னணி வங்கிகள் நான்கு தொலைதொடர்பு சேவை வழங்குனர்கள் வழியாக இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த சேவை வழங்கப்படுகின்றது.
*99# சேவையை எவ்வாறு பெற்றுக்கொள்வது?
- *99# என்ற இலக்கத்திற்கு டயல் செய்யவும். (இது உங்களது அலைபேசியில் வங்கியுடன் தொடர்புபடுத்தப்பட்ட அலைபேசி இலக்கமாக இருக்க வேண்டும்)
- விரும்பிய மொழியை தெரிவு செய்க, வங்கி பெயரை குறிப்பிடுக
- உங்களது அலைபேசி இலக்கத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள அனைத்து வங்கி கணக்கு விபரங்கள் பட்டியலிடப்படும். அதில் தேவையான கணக்கை தெரிக
- Debit அட்டையின் 6 இலக்கங்களையும் கலாவதியாகும் திகதியையும் உள்ளீடு செய்க.
இந்த அறிவுறுத்தல்களை சரியான முறையில் மேற்கொண்டால், இணைய வசதி இன்றியே வங்கி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியும்.
ஒப்லைன் UPI கொடுப்பனவு செய்வதற்கு
- *99# என்ற குறியீட்டை உள்ளீடு செய்து டயல் செய்யவும், பின்னர் பணம் அனுப்ப வேண்டுமாயின் இலக்கம் ஒன்றை அழுத்தவும்.
- UPI Id, அலைபேசி இலக்கம், வங்கி கணக்கு விபரங்கள் என்பனவற்றை உள்ளீடு செய்யவும்.
- தொகையை குறிப்பிட்டு UPI Pin இலக்கத்தை குறிப்பிடுக.
இந்த நடைமுறைகள் சரியாக செய்தால், கொடுப்பனவு சரியான முறையில் செய்ய முடியும். இந்த கொடுக்கல் வாங்கல் ஒன்றுக்கு 50 சதம் அறவீடு செய்யப்படும்.
தற்பொழுது அதிகபட்சமாக 5000 ரூபா அனுப்பி வைக்கப்பட முடியும்.