வெறும் 10 நிமிடத்தில் தக்காளி தோசை... அதுவும் தோசை மாவு இல்லாமல் செய்வது எப்படி?
பெரும்பாலான மக்களின் காலை உணவு இட்லி, தோசையையே விரும்புகின்றனர். இத்தருணத்தில் தோசை மாவு இல்லாத தருணத்தில் எவ்வாறு சமாளிப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.
வெறும் 1 கப் ரவை மற்றும் 2 தக்காளி மட்டும் இருந்தால் போதும். வெறும் 10 நிமிடத்தில் சுவையான டிபன் ரெடி. இதற்கு தேங்காய் சட்னியை வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
பெரிய தக்காளி - 2
வரமிளகாய் - 4
இஞ்சி - 1 சிறிய துண்டு
ரவை - 1 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - 1 கப்
சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்
செய்முறை
முதலில் மிக்சர்ஜாரில் பொடியாக நறுக்கிய தக்காளி, வரமிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் 1/4 கப் கோதுமை மாவு மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் தண்ணீர் கலந்து அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரம் ஒன்றில் மாற்றி 10 நிமிடம் மூடி வைத்து, பின்பு சமையல் சோடா கலந்துகொள்ளவும்.
பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தயாரித்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான தக்காளி தோசை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |