fish curry: அசத்தல் சுவையில் காரசாரமான பாறை மீன் குழம்பு... இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்பப் பட்டியலில் மீன்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.
அதிலும் கிராமத்து பாணியில் செய்த மீன் குழம்பு என்றால் சொல்லும் போதே நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.
அப்படி அசத்தல் சுவையில் காரசாரமான பாறை மீன் குழம்பை எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாறை மீன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 10
வெங்காயம் - 2
தக்காளி - 1
பூண்டு - 10பற்கள்
துருவிய தேங்காய் - 1/2 கப்
மிளகு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
மல்லித் தூள் - 2 தே.கரண்டி
மஞ்சள்தூள் - 1தே.கரண்டி
மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
புளி கரைசல் - 1/2கப்
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லித்தழை- ஒரு கைப்பிடி அளவு
உப்பு -தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் பாறை மீனை நன்றாக சுத்தம் செய்து வெட்டி ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் வெங்காயம்,மல்லித்தழை மற்றும் தக்காளியை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் புளியை ஊற வைத்து புளிக்கரைசலை தயார் செய்துக்கொள்வதுடன் தேங்காயை துருவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் புளிக்கரைசல் சேர்த்து நன்றாக ஊறவிட வேண்டும்.
இதற்கிடையில் ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், பூண்டு, மிளகு,சீரகம், மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய் தூள், சின்னவெங்காயம், மற்றும் உப்பு ஆகியவை போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த அரைத்த விழுதை புளிக்கரைசல் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு புளிக்கரைசல் உள்ள பாத்திரத்தில் மீன் துண்டுகள், தக்காளி, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வேகவிட வேண்டும்.
குழம்பு கெட்டியாக மாறும் போது கடாயினை அடுப்பில் இருந்து இறக்கி,நல்லெண்ணெய் ஊற்றி கலந்துவிட்டு நறுக்கிய மல்லியிலையை தூவினால் அவ்வளவு தான் அட்டகாசமாக சுவையில் பாறை மீன் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |