அட்டகாசமான சுவையில் முருங்கைக்காய் தொக்கு வேண்டுமா? பத்தே நிமிடத்தில் செய்யலாம்
பொதுவாகவே காய்கறிகளுள் முருங்கைக்காய் அனைவருக்கும் பிடித்ததமான ஒன்று.இதில் வைட்டமின் சி மிகுதியாக காணப்படுகின்றது. முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன.
முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. முருங்கைகாய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இப்படி மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் முருங்கைகாயில் சுவையான தொக்கு செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முருங்கைக் காய் - 2
தக்காளி - 2
எண்ணெய் - 3டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பூண்டு - 10 பள்ளு
சின்ன வெங்காயம் -15
புளி தேவையான அளவு
கொத்தமல்லி இலை
செய்முறை
முருங்கைக் காயை பெரிய நீள துண்டுகளாக நறுக்கி நீரில் வேக வைத்துக்கொள்ளவும். ஆறியதும் இரண்டாக பிரித்து ஸ்பூன் கொண்டு சதையை மட்டும் வழித்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணை சேர்த்து கடுகு ,சீரகம் ,கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், நறுக்கிய பூண்டு , சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் தனியாக எடுத்து வைத்திருக்கும் முருங்கைக்காய் சதையை அதனுடன் சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும். பின் தேயைான அளவு மிளகாய் தூள் மற்றும் கரைத்த புளி தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
இதன் பின் முருங்கைக்காய் கொதிக்க வைத்த தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை அதனுடன் சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் மணமணக்கும் அல்டிமேட் சுவையில் முருங்கைக்காய் தொக்கு ரெடி
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |