கால் வீக்கங்களை வற்ற வைக்கும் சௌசௌ சட்னி.. இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாமா?
பொதுவாக காய்கறிகளை பயன்படுத்தி பல வகையான உணவுகளை தயார் செய்யலாம்.
அந்த வகையில் காய்கறிகளில் மிக எளிமையாக கிடைக்கக்கூடிய காய்கறியாக சௌ சௌ பார்க்கப்படுகின்றது.
இதில் உயிர் ஊட்டச்சத்துக்களுடன் சேர்த்து நிறைய நுண்ணூட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
மேலும், நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் சிறந்த மருந்தாக செயற்படுகின்றது.
அந்த வகையில், சௌசௌவை பயன்படுத்தி சுவையான சட்னி செய்யலாம். இது தொடர்பான ரெசிபியை தெளிவாக தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
சௌசௌ - 1,
உளுந்து - 2 ஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2,
காய்ந்த மிளகாய் - 5,
பூண்டு - 6 பல்,
புளி - சிறிதளவு (ஒரு கொட்டை அளவு),
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு,
பெருங்காயம் - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிது,
சட்னி செய்முறை
முதலில் சௌசௌவை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். விதைகளை நீக்கிய பின்னர் நறுக்கி கொள்வது சிறந்தது.
பின்னர் ஒரு கடாயை எடுத்து எண்ணெய் விட்டு சூடானதும் உளுந்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
உளுந்து பொன்னிறமானவுடன் அதில் 5 காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்த பின், பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கி கொண்டிருக்கும் பொழுது தக்காளி சேர்த்து அதனை சௌசௌ துண்டுகளை சேர்த்து கொள்ளவும்.
வதங்கிய பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அடுத்ததாக கடாயில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து கொட்டினால் சுவையான சௌசௌ சட்னி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |