ஆரோக்கியமான முறையில் மாம்பழ ஐஸ்கிறீம்: வீட்டிலேயே எப்படி செய்வது?
பொதுவாகவே மாம்பழம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக கோடை காலம் ஆரம்பித்துவிட்டால் மாம்பழ சீசனும் ஆரம்பித்துவிடும்.
மாம்பழம் என்றாலே நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். மாம்பழ சுவையில் ஐஸ்கிறீம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மாம்பழ ஐஸ்கிறீமை எந்த ரசாயனமும் கலக்காமல் வீடடிலேயே எப்படி எளிமையாக செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மாம்பழம் - 5
ஸ்வீட் விப்பிங் கிரீம் - 400 மி.லி
பால் - 500 மி.லி.
குங்குமப்பூ - 1 சிட்டிகை
சர்க்கரை - 1 கப்
செய்முறை
முதலில், ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி அதில் குங்குமப்பூ மற்றும் சர்க்கரை ஆகியவற்றை கலந்து 15 நிமிடங்கள் வரையில் நன்றாக கொதிக்க விட்டு தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின் மாம்பழத்தை சுத்தம் செய்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய மாம்பழம் மற்றும் தயார் செய்து வைத்த கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் ஸ்வீட் விப்பிங் கிரீமை நன்கு அடித்து கொள்ளவும். பின்பு அரைத்த மாம்பழத்தை சேர்த்து நன்கு கலந்து மீண்டும் மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக இந்த கலவையை பாத்திரத்தில் ஊற்றி 12 மணிநேரம் பிரீஸரில் வைத்து எடுத்தால் ஆரோக்கியமான முறையில் சுவை நிறைந்த மாம்பழ ஐஸ்கிரீம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |