தக்காளி, வெங்காயம் வேண்டாம்: 5 நிமிடத்தில் சுவையான சட்னி எப்படி செய்வது?
பொதுவாக வீட்டில் எல்லா சந்தர்ப்பங்களிலும் காய்கறிகள் இருப்பதில்லை. அப்படி வெங்காயம் தக்காளி இல்லாத சந்தர்ப்பத்திலும் கூட ஐந்தே நிமிடத்தில் அட்டகாசமான சுவையில் எப்படி சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் - 1 கப்
பூண்டு - 2 பல்
புளி - சிறிது
வரமிளகாய் - 7
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 2 தே. கரண்டி
கடுகு - 1 தே. கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே. கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
முதலில் 1 கப் தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்சர் ஜாரில் போட்டுக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பூண்டு, புளி, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தாளிப்பதற்கு கொடுத்துள்ள அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் தாளித்ததை சட்னியுடன் சேர்த்து கிளறினால், அட்டகாசமான சுவையில் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |