ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பிரசாதம் ஜீரா! வீட்டிலேயே எப்படி செய்வது?
பொதுவாகவே கோவிலில் கொடுக்கும் பிரசாதங்களுக்கு என தனித்துவமான சுவையும் மணமும் காணப்படும் என்பது அனைவரும் அறிந்தது தான்.
அப்படி நம் மனதுக்கு பிடித்த சில கோவில் பிரசாதங்களை வீட்டிலேயே செய்து சுவாமிக்கு பூஜை செய்ய வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும்.

அந்தவகையில், ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் கிடைக்கும் பிரபலமான ஜீராவை எளிய முறையில் வெறும் பத்தே நிமித்தில் அதே சுவையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நெய் - 1/2 கப்
ரவை - 1 கப்
சூடான தண்ணீர் - 2 கப்
கற்கண்டு - 3/4 கப்
பொடித்த வெல்லம் - 1 கப்
ஏலக்காய் பொடி - ஒரு சிற்றிகை அளவு
நெய் - 1 தே.கரண்டி
பச்சை கற்பூரம் - துளியளவு

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடானதும் 1/2 கப் நெய் நேர்த்து மற்றும் ஒரு கப் அளவுக்கு ரவை சேர்த்து, நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
ரவையை நன்றாக வறுத்த பின்னர், 2 கப் கொதிக்க வைத்த தண்ணீர் சேர்த்து, கட்டிப்படாமல் நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.

ரவை நன்றாக பஞ்சு போன்ற பதத்துக்கு வெந்து வந்ததும், கற்கண்டு மற்றும் வெல்லம் சேர்த்து, நன்றாக கிளறிவிட வேண்டும்.
பாத்திரத்தில் ஒட்டாத பத்த்துக்கு வந்த பின்னர் ஒரு தே.கரண்டி நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்துவிட்டு, துளியளவு பச்சை கற்பூரம் கலந்து இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவை மற்றும் தெய்வீக மணத்துடன் ஸ்ரீரங்கம் கோவில் ஜீரா (Jeera) பிரசாதம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |