இலங்கை ஸ்பெஷல் தேங்காய் சம்பல்.. வெறும் 5 நிமிடத்தில் செய்வது எப்படி?
இலங்கை ஸ்பெஷலான தேங்காய் சம்பல் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் கேரளமாநிலத்தில் சம்மந்தி எப்படி பிரமாகியுள்ளதோ, அதே போன்று இலங்கையில் சம்பல் மிகவும் பிரபலமாகும்.
இதனை செய்வதற்கு அடுப்பு, எண்ணெய் எதுவும் தேவையில்லை.. நேரமும் வெறும் 5 நிமிடம் மட்டுமே ஆகுமாம்.
வெறும் ஐந்து பொருட்களை மட்டும் வைத்து இலங்கை ஸ்பெஷல் சம்பல் எவ்வாறு செய்யலாம் என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
தேங்காய் - அரைமூடி
பெரிய வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 5-6
நறுக்கிய கொத்தமல்லி
உப்பு - தேவையான அளவு
புளிக்கரைசல் - 1 டம்ளர்

செய்யும் முறை
அகலமான பாத்திரம் ஒன்றினை எடுத்துக் கொள்ளவும். அதில் துருவிய தேங்காய், மெல்லிய நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
பின்பு காய்ந்த மிளகாயைச் சேர்த்து கொரகொரப்பாக சில்லி ஃப்ளாக்ஸ் போன்று அரைத்து எடுத்துக் கொள்ளவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியையும் சேர்க்க வேண்டும்.

தொடர்ந்து சிறிய நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து கரைத்த புளிக்கரைசலை கலவையுடன் சேர்க்கவும்.
பின்பு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் சேர்த்த பின்பு கைகளால் நன்றாக கலந்து பிசைந்து எடுத்தால் இலங்கை ஸ்பெஷல் சம்பல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |