Mango Chutney: காரசாரமான மாங்காய் சட்னி செய்ததுண்டா? 10 நிமிடத்தில் தயார்
சுவையான மாங்காய் சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக மாங்காயில் ஊறுகாய், சாதம், பொரியல் என செய்து சாப்பிடுவோம். பெரும்பாலான நேரங்களில் ஊறுகாய் செய்தே மாங்காயை சாப்பிட்டு வந்துள்ளோம்.
தற்போது மாங்காயில் சட்னி செய்வதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பச்சை மாங்காய் – 1
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 1
பூண்டு பற்கள் – 4
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்
சீரக தூள் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
எள் – 1 டீஸ்பூன்
வெல்லம் – 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு அல்லது வேர்க்கடலை – 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு வெட்டி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளியும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், உப்பு சேர்த்து கலந்த பின்பு, துருவிய மாங்காயை சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
மிதமான தீயில் 5-7 நிமிடங்கள் கிளறி, இறுதியாக கொத்தமல்லி, எள், வெல்லம், மற்றும் முந்திரி சேர்த்து குழையும்படி செய்து இறக்கினால் மாங்காய் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
