Spicy Crab Masala : மழைக்கு இதமான நண்டு மசாலா... சளி, இருமல் ஓடியே போயிடும்
மழை காலத்தில் அட்டகாசமான நன்மையை அளிக்கும் காரசாரமான நண்டு மசாலா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
நண்டு - முக்கால் கிலோ
எண்ணெய் - 2 ஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
மல்லித்தழை - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 1 ( நீளவாக்கில் வெட்டியது)
சின்ன வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்றரை ஸ்பூன்
தக்காளி - 2
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - ஒரு ஸ்பூன்

செய்முறை
முதலில் நண்டை நன்றாக சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விடவும்.
பின்பு சோம்பு, கறிவேப்பிலை சேர்க்கவும். தொடர்ந்து பெரிய மற்றும் சின்ன வெங்காயத்தினைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
தொடர்ந்து இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம்மசாலா சேர்த்து 30 நொடி வதக்கவும்.

பின்பு நண்டை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டவும். நண்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
கடைசியாக இறக்கி வைக்கும் முன்பு மிளகு தூள் மல்லித்தழை சேர்த்து கலந்துவிட்டால் சுவையான நண்டு மசால் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |