Spicy Chicken Fry: சிக்கன் வறுவலை இப்படி செய்து பாருங்க... அசைவ பிரியர்களே மிஸ் பண்ணிடாதீங்க
அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான சிக்கனை காரசாரமான முறையில் சிக்கன் ப்ரை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கிரேவிக்கு
சிக்கன் - முக்கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் வெட்டியது)
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு - ஒன்றரை ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து

பொடியாக்குவதற்கு
தனியா - ஒன்றரை ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
கருப்பு எள் - 1 ஸ்பூன்
கிராம்பு - 6
பட்டை - 2 (சிறிய துண்டு)
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பொடியாக்குவதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பொடி செய்து கழுவி வைத்திருக்கும் சிக்கனுடன் பொடியை சேர்க்கவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, சிறிதளவு எண்ணெய், எலுமிச்சை சாறு இவற்றினையும் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

பின்பு கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் மசாலா கலந்து வைத்திருக்கும் சிக்கனையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
சிறிதளவு தண்ணீரை தெளித்துவிட்டு கலந்துவிட்ட பின்பு, பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு 10 நிமிடம் மூடி வைத்து வேக விடவும். கடைசியாக மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி இறக்கவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |