ஒரேமாதத்தில் உடல் எடையை குறைக்க - இந்த சோயா ராகி அடை செய்து சாப்பிடுங்க
தற்போது இருக்கும் மக்களுக்கு உடல் எடை பிரச்சனை மிகவும் அதிகமாகி கொண்டு வருகின்றது. இதற்கு ஒவ்வொருவரும் டயட் செய்து வரகின்றனர்.
இது தவிர இன்னும் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். ஆனால் செய்து என்ன பலன். பசி என்பது வரதான் செய்யும் நாமும் உணவை எப்படியும் விரும்பி சாப்பிடத்தான் போகின்றோம்.
இதற்கு ஒரு நல்ல தீர்வாக தான் நாம் இன்று சோயா ராகி அடை சாப்பிட பரிந்துரைக்கின்றோம். இந்த அடையில் நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கிறது.
இதை நாம் தினமும் காலை உணவாக எடுத்துக்கொண்டால் அது நம் எடலுக் ஒரு நல்ல தீர்வை கொடுக்கும். அந்த வகையில் உடலுக்கு சத்துக்களுள் தந்து எடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளும் சோயா ராகியை பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- கேழ்வரகு மாவு - 1 கப்
- சோயா மாவு - கால் கப்
- அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 1
- இஞ்சி - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - கொஞ்சம்
- சீரகம் - அரை டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - மாவு பிசைய
- தேவையான அளவு எண்ணெய்/நெய் - அடை சுட தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் கேழ்வரகு மாவு, சோயா மாவு, அரிசி மாவு மூன்றையும் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, சீரகம் மற்றும் தேவையான உப்பு எல்லாத்தையும் சேர்க்க வேண்டும்.
எல்லாவற்றையும் நல்லா கலந்து விட்டதற்கு பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமா தண்ணீர் சேர்த்து மாவை பிசைஞ்சுக்கோங்க. மாவு ரொம்ப தண்ணியா இருக்கக்கூடாது.
அடை மாவு மாதிரி வழக்கமான தோசை மாவை விட கொஞ்சம் கெட்டியா இருக்க வேண்டும். மாவை பிசைஞ்சதும் ஒரு 15 நிமிஷம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.

இப்போது அடுப்பில் தோசைக்கல் வைத்து அதை நல்லா சூடு பண்ணுங்க. தோசைக்கல்ல சூடானதும், அடுப்ப மிதமான தீயில வச்சுக்கோங்க. மாவை ஒரு கரண்டியில எடுத்து, கல்லுல ஊத்தி மெல்லமா அடை மாதிரி பரப்பி விடுங்க.
அடை ரொம்ப மெல்லிசா இருக்க வேண்டாம், கொஞ்சம் திக்காவே இருக்க வேண்டும். அடைய சுத்தி எண்ணெய் இல்லனா நெய் ஊத்தி, ரெண்டு பக்கமும் நல்லா பொன்னிறமா, மொறுமொறுப்பா ஆகும் வரைக்கும் சுட்டு எடுங்க.
அடை மெதுவா வேகணும், அப்போதான் உள்ள இருக்க மாவு எல்லாம் நல்லா வெந்து மொறுமொறுப்பா வரும். அவ்வளவு தான் அடை தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |