ரேஷன் அரிசியில் பஞ்சு போன்ற இட்லி வேண்டுமா? இப்படி மட்டும் அரைத்தால் போதும்
ரேஷன் அரிசியில் இட்லி பஞ்சு போல வருவதற்கு மாவை எவ்வாறு அரைப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இட்லி
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவாக இருக்கும் இட்லியை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
எளிதில் ஜீரணமாகக்கூடிய இந்த உணவு தான் பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு நேர சாப்பாடாக இருக்கும்.
இதற்கு சாம்பார், சட்னி, இட்லி பொடி என வைத்து சாப்பிட்டால், சுவை வேறு லெவலில் இருக்கும். அதிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் அனைவருக்கும் உகந்த உணவாகும்.
ஆனால் இட்லி பஞ்சு போன்று இருந்தால் மட்டுமே விரும்பி சாப்பிட முடியும். சில நேரங்களில் இட்லி கல் போன்று இருந்தால், இட்லி பிரியர்களே இட்லியை வெறுத்துவிடுவார்கள்.
தற்போது ரேஷன் அரிசியில் பஞ்சு போன்ற இட்லி செய்வதற்கு நாம் எவ்வாறு மாவை அரைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
செய்முறை:
முதலில் அருகில் புழுங்கல் அரிசி மூன்று டம்ளரும், பச்சரிசி ஒரு டம்ளரும் எடுத்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு ஒரு டம்பளர் உளுந்து மற்றும் 2 ஸ்பூன் வெந்தயம் இவற்றினை எடுத்து இதையும் 2 மணி நேரம் தனியாக ஊற வைக்கவும்.
பின்பு கிரைண்டரில் உளுந்து மற்றும் பெந்தயத்தை சுர்ந்து நன்கு மையாக அரைத்து பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். அதன் பின்பு ஊற வைத்துள்ள அரிசியையும் தண்ணீர் அதிகமாக சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து, உளுந்து மாவு வைத்துள்ள பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
பின்பு சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக இரண்டு மாவும் ஒன்றாக கலக்குமாறு கலக்கிவிடவும். மூடி போட்டு இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும்.
மறுநாள் காலையில் இட்லி மாவு நன்றாக பொங்கியுள்ள நிலையில், நன்றாக அடித்து கலக்கி, இட்லிக்கு ஊற்றி எடுக்கவும். தற்போது பஞ்சு போன்ற இட்லி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |