காய்கறி இல்லாமல் வித்தியாசமான சாம்பார்... வெறும் 10 நிமிடத்தில் தயார் செய்யலாம்
தினமும் ஒரே மாதிரியான சாம்பார் செய்தால் முகம் சுழிக்கும் நபர்களுக்கு, சற்று வித்தியாசமாக பருப்பு குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக சாம்பார் என்றால் சுவையாக இருந்தாலும், அடிக்கடி வைத்தால் வீட்டில் உள்ளவர்கள் முகத்தை சுழிப்பார்கள். தற்போது காய்கறிகள் எதுவும் இல்லாமல் வெறும் பருப்பை மட்டுமே வைத்து வித்தியாசமான பருப்பு குழம்பு செய்யலாம்.
தேவையான பொருட்கள்
பருப்பு - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 8 பல்
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 1
வரமல்லி - ஒரு ஸ்பூன் (தட்டியது)
சீரகம் - கால் ஸ்பூன்
மிளகு - 10
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
மசாலா அரைக்க
தேங்காய் துருவல் - ஒரு கப்
சீரகம் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சின்ன வெங்காயம் - 2
தாளிக்க
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
சீரகம் - கால் ஸ்பூன்
உளுந்து - கால் ஸ்பூன்
வர மிளகாய் - 3
கறிவேற்றிலை - ஒரு கொத்து
பூண்டு - 4 பல் (தட்டியது)
பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 6 (பொடியாக நறுக்கியது)
செய்முறை
முதலில் மேலே அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இந்த குழம்பிற்கு சாம்பார் பொடி பயன்படுத்தக்கூடாது.
தற்போது பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, வரமல்லி, சீரகம், மிளகு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் அனைத்தையும் குக்கரில் சேர்த்து குழையாமல் வேக வைத்து கொள்ளவும்.
பின்பு அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். பின்பு தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
கடைசியாக தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்த்துவிட வேண்டும். மிகவும் சுலபமான முறையில் தயாரிக்கப்படும் இந்த பருப்பு குழம்பை வீட்டில் போட்டி போட்டு நிச்சயம் சாப்பிடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |