ரோட்டு கடை காளான் ரெசிபி... வீட்டிலேயே செய்வது எப்படி?
Road Kadai Mushroom: ரோட்டு கடைகளில் பிரபலமான காளான் எவ்வாறு வீட்டிலேயே செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
காளான் - 250 கிராம்
முட்டை கோஸ் - 250 கிராம்
மைதா - 100 கிராம்
சோள மாவு - 50 கிராம்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி இலை - கைப்பிடி
கறிவேப்பிலை - 2 கொத்து
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 250 மில்லி
தக்காளி சாஸ் - 8 ஸ்பூன்
மிளகாய் சாஸ் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - அரை ஸ்பூன்

செய்முறை
முதலில் காளான், முட்டைக் கோஸ் இவற்றினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதனை பவுல் ஒன்றில் சேர்த்து அதனுடன் சோள மாவு மற்றும் மைதா மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மிளகாய் பொடி இவற்றினை சேர்த்து நன்றாக கிளறவும்.
தண்ணீர் எதுவும் சேர்க்காமல் நன்றாகி பிசைந்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் இதனை பொரிப்பதற்கு எண்ணெய் சேர்த்து சிறிது சிறிதாக சேர்த்து பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
பின்பு கடாய் ஒன்றின அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, அதில் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை இவற்றினை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கிளறவும். இதனுடன் தக்காளி சாஸ், சோயா சாஸ், மிளகாய் சாஸ், உப்பு, அரை ஸ்பூன் மிளகாய்பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்பு சிறிதளது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதனுடன் சிறிதளது சோளமாவைக் கரைத்து சேர்க்கவும். அதிக கெட்டியாக இருந்தால் மீண்டும் சிறிதளது தண்ணீர் சேர்த்து கலந்துவிடவும்.
இதனுடன் காளான் சேர்த்து நன்றாக மசாலாவில் கிளறவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். நறுக்கிய வெங்காயத்தை மேலே தூவி சாப்பிட்டால் ரோடு கடை காளான் ரெசிபி தயார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |