முள்ளங்கி சப்பாத்தி செய்ய தெரியுமா? இத போலோ பண்ணுங்க!
முள்ளங்கியில் பல ஆரோக்கிய நன்மை இருக்கிறது. ஆனால் இது பலருக்கு பிடிக்காது. எனவே இதை வைத்து சப்பாத்தி செய்ங்க.

முள்ளங்கி சப்பாத்தி
வேரில் இருந்து கிடைக்கும் முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவுகளைக் குறைக்க முடியும்.
அதோடு, முள்ளங்கியில் ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும் இரசாயனங்கள் அடங்கி உள்ளன.
ஆனால் மக்கள் பலரும் இதை விரும்ப மாட்டார்கள். எனவே இதில் சப்பாத்தி செய்தால் உடலுக்கும் ஆரோக்கியம் சுவையாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்
முள்ளங்கி - 2
கோதுமை மாவு – 2 கப்
மிளகாய் – 2
நெய் – 1 சிறிய கப்
அரிசி மாவு – 1 கப்
மஞ்சள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவையான அளவு

செய்முறை
சப்பாத்தி செய்ய முதலில் முள்ளங்கியை சிறு துண்டுகளாக நறுக்கி, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீரில் வேக வைக்கவும். பின்னர் தண்ணீரை வடிகட்டி, அதை நன்றாக அரைக்கவும்.
இந்தக் கலவையில் மிளகாய்த்தூள் சேர்த்து தனியாக வைக்கவும். பின்னர் கோதுமை மாவுடன் நெய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசையவும்.

பிறகு, சிறு உருண்டைகளாக உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் கோதுமை மாவு சப்பாத்தி போல சுருட்டி, அதன் நடுவில் ஒரு கரண்டி முள்ளங்கி விழுது வைக்கவும்.
பிறகு அதை எல்லாப் பக்கங்களிலும் முக்கோண வடிவில் மடித்து, சப்பாத்தி போலத் தட்டையாக்கவும். இப்போது அதை அடுப்பில் உள்ள தவாவில் வைத்து, இருபுறமும் எண்ணெய் அல்லது நெய் தடவி, ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும்.