சிக்கன் மிளகு கிரேவி இப்படி வைத்து பாருங்க... சுவை அட்டகாசமாக இருக்குமாம்
சப்பாத்தி, சாதத்திற்கு ஏற்ற சிக்கன் மிளகு கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சிக்கன்
அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான சிக்கனை பல வகைகளில் சமைத்து சாப்பிடுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்களும் சிக்கனை விரும்பி சாப்பிடுகின்றனர்.
அதிலும் சிக்கனை மிளகு கிரேவியாக செய்து சாப்பிடுவது உடம்பிற்கு மிகவும் பயனைக் கொடுக்கின்றது. ஆம் சளி, இருமல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக மிளகு சிக்கன் கிரேவி காணப்படுகின்றது.
தற்போது வீட்டில் எளிய முறையில் சிக்கன் மிளகு கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
வதக்கி அரைப்பதற்கு...
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கல்பாசி - சிறிது
அன்னாசிப்பூ - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
வரமிளகாய் - 5
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 5
இஞ்சி - 1 மீடியம் அளவு துண்டு
பூண்டு - 5 பல்
தேங்காய் - 2 சில்லு

தாளிப்பதற்கு...
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 4
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
சிக்கன் - 1 கிலோ
அரைத்த மசாலா
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் வறுப்பதற்கு கொடுத்த பொருட்களை வறுத்து மிக்ஸி ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயினை வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, அதில் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும்வரை வதக்கவும்.

இதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். நறுக்கிய தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கிய பின்பு சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கரை சேர்த்து 5 வதக்கவும்.
பின்பு அரைத்த மசாலாவை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லியை தூவி இறக்கினால், சுவையான சிக்கன் மிளகு கிரேவி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |