பீநட் பட்டர் ரொம்ப பிடிக்குமா? கவலைய விடுங்க... 5 நிமிஷத்துல செய்யலாம்... இதோ ரெசிபி
பீநட் பட்டர் என்பது வேறொன்றுமில்லை நிலக்கடலை மூலம் செய்யப்படும் ஒரு பட்டர்.
இவை பலருக்கும் பிடித்த ஒரு உணவாக இருக்கிறது. இதை பலரும் பிரெட்டில் தடவி சாப்பிடுவார்கள்.
சிலர் அப்படியே சாப்பிடுவார்கள். இதை பலவிதமான உணவுகளிலும் சேர்த்துக் கொண்டு சாப்பிடுவார்கள். ஐந்து நிமிடத்தில் வீட்டிலேயே தயார் செய்ய இந்த கட்டுரையை முழுமையாக படித்துக் கொள்ளுங்கள்.
பீநட் பட்டர் என்பது பொதுவாக காலை உணவு, ஈவினிங் ஸ்நாக்ஸ் போன்றவைகளில் பெரும்பாலோனோர் பயன்படுத்தி வருகின்றனர். முக்கியமாக இவை, வெளி நாடுகளில் அதிக அளவு பயன்பட்டு வருகின்றது.
இப்பொழுது கொஞ்சம் காலமாக இந்தியாவிலும் பயன்பட்டு வருகிறது.
இது அதிகப்படியான நன்மைகளை உடலுக்கு தரக் கூடிய ஒரு உணவாகவும் இருக்கிறது. இதில் எந்தவித கெமிக்கல் போன்ற காரணிகள் கலப்பது இல்லை. எனவே முழுக்க முழுக்க இது ஒரு இயற்கையான உணவாகவும் இருக்கிறது.
பீநட் பட்டர் வீட்டிலேயே செய்வது எப்படி?
- அரைக்கிலோ வறுத்த வேர்க்கடலை 2 டேபிள்ஸ்பூன்
- தேன் ஒரு டேபிள் ஸ்பூன்
- ஆலிவ் ஆயில்
- சிறிதளவு உப்பு
செய்முறை
வறுத்த வேர்கடலைகளை புட் பிராசஸர் உள்ளே போடவும். இப்பொழுது புட் பிராஸஸரை ஓட விடவும்.
தொடர்ந்து 4 முதல் 5 நிமிடங்கள் ஓட விடவும். அது ஓடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், நீங்கள் கடலைகள் உடைந்து, அரைந்து ஒரு வட்ட வடிவத்தில் உருண்டு இருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.
ஒரு க்ரீம் போல் வரும்வரை அரைக்க வேண்டும். மிகவும் நன்றாக அரைக்க வேண்டும். ஐஸ்கிரீம் போன்ற பதம் வரும் வரை அரைக்க வேண்டும்.
பிறகு அதில் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெயை கலந்து அரைக்க வேண்டும். சிறிதளவு உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு பிரிட்ஜ் அல்லது அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்.
அவ்வளவுதான் தயாராகிவிட்டது. சிலருக்கு இது க்ரீம் போல் இல்லாமல் சிறிது கரகரவென இருக்க நினைப்பார்கள்.
அவர்கள் இன்னும் ஒரு 50 கிராம் வேர்க்கடலை எடுத்து லேசாக மிக்ஸியில் அரைத்து இதில் கலந்து கொண்டால் அவர்கள் நினைப்பது போல் கிடைத்துவிடும்.
நன்மைகள்
- இந்த வேர்க்கடலை பட்டரில் மேலும் நம் மேனியை அழகாக்கும் நன்மை பயக்கும் காரணியும் இருக்கிறது.
- இதில் அதிகப்படியான விட்டமின் இ இருக்கிறது.
- இவை கண்கள், மூளை, தலைமுடி, தோல் போன்றவைகளுக்கு நன்மை பயக்கிறது.
- நீங்கள் அதிகப்படியாக உடல் கட்டை விரும்புபவர்களாக இருந்தால் நிச்சயம் இந்த வேர்க்கடலை பட்டரை நீங்கள் தவிர்க்க முடியாது.
- உடலில் உள்ள தசைகள் வேகமாக இயங்குவதற்கு வேர்க்கடலை பட்டர் உதவி செய்கிறது.
- இதில் உள்ள கால்சியம் உடலில் உள்ள எலும்புகள் மேலும் வலு ஆவதற்கும, செய்கிறது தினமும் ஒரு ஸ்பூன் கடலை பட்டர் எடுத்து வந்தால் அதில் உள்ள விட்டமின் கே உடலுக்கு இன்னும் பலவிதமான நன்மைகளை தந்து கொண்டே இருக்கும்.