ஸ்பெஷலான பச்சை புளி ரசம்... வெறும் 5 நிமிடத்தில் எப்படி செய்யலாம்?
ஆரோக்கியமான உணவில் ஒன்றான ரசம், மசாலா இல்லாமல் பச்சை புளி ரசம் எப்படி வைப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பச்சை புளி ரசம் என்பது ஈரோடு மற்றும் கொங்கு நாட்டில் பரவலாக செய்யப்படும் ஒரு சிறப்பான உணவு ஆகும். இது உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாகும்.
தேவையான பொருட்கள்:
பச்சை புளி (Raw Tamarind) - சிறிய எலுமிச்சை அளவு
தண்ணீர் - 2 கப்
பச்சைமிளகாய் - 2 (நீளமாக வெட்டியது)
சின்ன வெங்காயம் - 5-6 (அரைத்தது)
தக்காளி - 1 (நறுக்கியது)
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிக்க தேவையானவை:
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
சுக்கு பொடி - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
புளியை நீரில் கரைத்து சாறு எடுத்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பாத்திரம் ஒன்றில் புளி நீர், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, உப்பு, பெருங்காயத்தூள், மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும். இதை மிதமான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க விடவும். புளியின் கசப்பு நீங்கி, சுவை ஒன்றாக கலந்து வரும்.
தாளிப்பதற்கு வாணலி ஒன்றினை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், சுக்கு பொடி சேர்த்து தாளிக்கவும்.
இதை பச்சை புளி ரசத்தில் சேர்த்து கிளறி, கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
வெள்ளை சாதத்துடன் சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தோசை, இடியப்பத்திற்கும் இதை தொட்டுக் கொண்டால் வித்தியாசமான சுவை கிடைக்கும். நாட்டு வைத்திய குணம் உள்ளதால் இது ஜீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றை சுகமாக வைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |