சரசரவென்று உடல் எடை குறைய வேண்டுமா? இந்த ஒரு பானம் குடிங்க போதும்
எடை அதிகரிப்பால் சிரமத்திற்கு உள்ளானவர்களுக்கு விரைவாக எடை இழப்பிற்கு உதவும் பானம் ஒன்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
எடை இழப்பு பானம்
தற்போது மனிதர்களின் உணவுப்பழக்க வழக்கம் மோசமாக உள்ள காரணத்தினால் உடல் எடை அதிகரித்து பல நோய்களுக்கு உள்ளாகின்றனர். உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உணவை சரிவர எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதுதான் டயட் முறையாக கருதப்படுகின்றது. இதற்காக நாம் உணவை சரிவர மேற்கொள்ள முடியாது எனில் அதற்கு ஒரு சிறந்த மருந்து தான் வெந்தய பானம். இதற்கு முதலில் நாம் வெந்தயத்தை வறுத்து அதை பொடியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் சீரகம் போட்டு, மிதமான தீயில் வறுக்க வேண்டும். அதே போல, அதே கடாயில் 2 டேபிள் ஸ்பூன் தனியா போட்டு, மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பட்டையை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நன்றாக ஆறிய பின்னர் ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு பேன் வைத்து அதில் 2 டம்பளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அளவு 200 மி.லி ஆக இருப்பது அவசியம். அதில், தயார் செய்து வைத்துள்ள பொடியை 1 டீஸ்பூன் போட்டு நன்றாக கலந்து விட்டு பாதி அளவு தண்ணீராக சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாகக் கொதித்த பிறகு, வடிகட்டிக் கொள்ளுங்கள். பிறகு, அதில் ஒரு அரை எலுமிச்சை பழம் சாறு பிழிந்து விட்டு அரை சிட்டிகை உப்பு சேர்த்து எப்போது குடிக்க முடியுமோ அப்போது குடிக்கலாம். இப்படி செய்தால் விரைவில் உடல் எடை குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |