ஆந்திரா பாணியில் அடுப்பே இல்லாமல் அசத்தல் ரசம்... எப்படி செய்வது?
தென்னிந்திய சமையலில் ரசத்துக்கு மிகவும் முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. இது வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல், நம் உடல் நலத்திற்கும் மிகவும் அவசியமானது.
பல்வேறு வகையான ரசங்கள் இருந்தாலும், பச்சைப் புளி ரசத்துக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது.
காரணம் இந்த ரசத்தை செய்வது மிகவும் எளிதானது, மேலும் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
குறிப்பாக இந்த பச்சை புளி ரசத்தை சிறுவர்களும் கூட செய்யலாம் அதனை செய்ய அடுப்பே தேவைப்படாது என்பது தான் இதன் சிறப்பம்சம்.
ஆந்திரா பாணியில் நாவூரும் சுவையில் அசத்தல் பச்சை புளி ரசத்தை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மிளகு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
புளி - 1 எலுமிச்சை அளவு
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி
செய்முறை
முதலில் இடி உரலில் மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து ஒன்றிரண்டாக நன்றாக தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு கிண்ணத்தில் புளியை போட்டு, தண்ணீர் ஊற்றி, 15 நிமிடங்கள் வரையில் நன்கு ஊறவி்ட வேண்டும்.
பின்னர் புளியை கைகளால் நன்றாக பிசைந்து, வடிகட்டி தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் தட்டி வைத்துள்ள பொருட்களை போட்டு, அதில் கரைத்து வடிகட்டி வைத்துள்ள புளி தண்ணீரையும் ஊற்றி மேலும் சிறிது நீர் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
பின்பு சிறிது கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து, கைகளால் நன்றாக கலந்துவிட்டால், அவ்வளவு தான் அருமையான சுவையில் பச்ச புளி ரசம் தயார்.
Black chickpea curry: கூந்தல் உதிர்வு முதல் ரத்த அழுத்தம் வரை... தீர்வு கொடுக்கும் கருப்பு கொண்டைக் கடலை குழம்பு
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |