மட்டன் இல்லாமலேயே மட்டன் கபாப்.... வெறும் 5 நிமிடத்தில் செய்வது எப்படி?
அசைவ பிரியர்களே மட்டன் சேர்க்காமலேயே மட்டன் கபாப் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அசைவ பிரியர்கள் கபாப் என்றால் மிகவும் பிடிக்கும். மட்டன் மற்றும் சிக்கன் போன்றவற்றில் செய்யும் கபாப் அதே சுவையில் சைவத்திலும் செய்யலாம்.
சைவ பிரியர்களுக்கு பிடித்தமான சுவையில் வெறும் மீல் மேக்கரை மட்டும் வைத்து கபாப் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
மீல் மேக்கர் - 100 கிராம்
சோம்பு - அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
தனியா தூள் - ஒன்றரை ஸ்பூன்
மிளகு தூள் - அரை ஸ்பூன்
சீரக தூள் - அரை ஸ்பூன்
கரம் மசாலா - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
மல்லித்தழை - ஒரு கைப்பிடி
மைதா - 6 டேபிள் ஸ்பூன்
சோளமாவு - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் மீல்மேக்கரை சுடுதண்ணீரில் போட்டு, சிறிதளது உப்பு சேர்த்து ஒரு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பின்பு நன்றாக பிளிந்து எடுத்து சாதாரண தண்ணீரில் கழுவி பிளிந்து எடுத்துக் கொள்ளவும்.

இதனை மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்த்து இதனுடன் சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அரைத்த விழுதுடன், மிளகாய் பொடி, தனியா தூள், சீரக தூள், உப்பு, எலுமிச்சை சாறு, கரம் மசாலா, மிளகு தூள், வெங்காயம், மல்லித்தழை இவற்றினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கலந்து கொண்ட கபாப் மசாலாவுடன், மைதா மற்றும் சோளமாவு சேர்த்து நன்றாக கலந்து சிறு சிறு உருண்டையாக உருட்டி எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்யை கடாயில் ஊற்றி உருண்டைகளை எண்ணெய் காய்ந்ததும் சேர்த்து மிதமான தீயில் வைத்து பொரித்து எடுத்தால் சைவ கபாப் தயார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |